கோலா திரங்கானு , அக்டோபர் 15-
திரெங்கானு, டங்கன், பந்தாய் பக்கா – அருகே உள்ள
கால்வால் அருகில் ஆண் குழந்தை ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது.
கடற்கரைப் பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள், அந்த குழந்தை, ஆடையின்றி, ஒரு பேக் பை ஒன்றில் வைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த குழந்தையை கைவிட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் சந்தேக நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்று டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் மைசூரா அப்துல் காதிர் தெரிவித்தார்.
அக்குழந்தை தற்போது கெமாமான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.