கோலாலம்பூர், அக்டோபர் 15-
இன்று காலையில் செக்ஷன் 1, UiTM சாலை வட்டத்தில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு கீழே விழுந்ததில் four-wheel drive, வாகனம் ஒன்று கடுமையாக சேதமடைந்தது.
காலை 11.24 மணியளவில் பலத்த மழையின் போது இந்த சம்பவம்
நிகழ்ந்ததாகவும், ஆனால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை
என்றும் சிலாங்கூர் ஜேபிபிஎம் இயக்க உதவி இயக்குனர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
ஷா ஆலாம் நிலையத்திலிருந்து ஏழு வீரர்கள் ஒரு இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு மரக்கிளைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு, சாலை சுத்தம் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கிள்ளான் பள்ளத்தாக்கின் இன்று காலை முதல் பெய்த கனமழையால் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் வாகனமோட்டிகளை பெரும் சிரமத்தில் ஆழ்த்தியது..