கோத்தா பாரு, அக்டோபர் 15-
பல்வேறு வகையான போதைப் பொருள்களை
கடத்திய மற்றும் பதுக்கி வைத்ததாக சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவரை கிளந்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த நபரை பிடித்தது மூலம் போலீசார், 5 கோடியே 91 லட்சத்து 70
ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 600 கிலோ Yaba வகை போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயினைக் கைப்பற்றினர்.
இந்த சோதனையில் 652.4 கிலோ Yaba வகை போதை மாத்திரைகளும் 2.6 கிலோ ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டதாக
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்புப்விரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ காவ் கோக் சின் தெரிவித்தார்.
இவ்வாண்டில் அரச மலேசியப் போலீஸ் படை, மிகப்பெரிய அளவில் கைப்பற்றிய மிக போதைப் பொருள் இதுவாகும்
என்றார் அவர்.
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி திங்கள்கிழமை பாசிர் மாஸ்- ஸில் வீடொன்றில் சோதனை மேற்கொண்ட போலீசார், 32
வயதுடைய ஆடவனைக் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் முதல் தீவிரமாகச் செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் இடைத் தரகராக அந்த சந்தேகப்பேர்வழி செயல்பட்டு வந்துள்ளான் என்று இன்று கோத்தாபாருவில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை குறிப்பிட்டார்.