பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 15-
கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவு நெடுஞ்சாலையான NKVE – வில் போக்குவரத்து நெரிசல் காரணமாக எட்டு வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டிருந்த வேளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லோரி ஒன்று , வாகனங்களை மோதியவாறு சென்றது, வாகனமோட்டிகள் பலரை நிலைக்குலைய செய்தது.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் NKVE சாலையின் 18.5 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிஜான் ஜாபர் தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பாக மாலையில் போலீஸ் புகார் ஒன்று பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அந்த டிரெய்லர் லோரி சற்று மேடான மலைப்பகுதியிலிருந்து இறங்கிக்கொண்டு இருந்த போது பிரேக் செயலிழந்தாக தெரியவந்துள்ளது.
அந்த கனரக வாகனம், எட்டு வாகனங்களை மோதித்தள்ளியுள்ளது. இது குறித்து 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்ப்டடு வருவதாக அவர் குறிப்பிட்டார்.