ஈப்போ , அக்டோபர் 15-
பேரா, Gerik அருகில் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையின் 79.2 ஆவது கிலோ மீட்டரில் Bagan Balak கொங்சி வீட்டின் அருகில் புலியால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர், உடலில் பலத்த காயங்கள் மற்றம் கீறல்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அப்பகுதியில் கனரக வாகன இயக்குநரான வேலை செய்து வந்த 54 வயது நபர், கொங்சி வீட்டின் கழிப்பறைக்கு சென்று கொண்டிருந்த போது புலியால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்ப்படுவதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் ஒரு தாய்லாந்துப் பிரஜையான அந்த நபரின் மனைவியின் கண்முன்னே நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அந்த கொங்சி வீட்டிற்கு அருகில் பலத்த சத்தம் கேட்டு கதவின் வாயிலாக எட்டிப்பார்த்தப் போது தமக்கு கணவரை கடித்துக் குதறிய அந்தப் புலி, சடலத்தை கவ்விக்கொண்டு புதர் பகுதியை நோக்கி இழுத்துச் சென்றதாக அந்த மாது சாட்சியம் அளித்துள்ளார் என்று டத்தோ அசிசி மேட் அரிஸ் கூறினார்.