ரவுப் வட்டாரத்தில் தீபாவளி கலை இரவு 2024

ரவூப் , அக்டோபர் 15-

மடானி அரசாங்கத்தின் நல்லாதரவுடன், நாளை மறுநாள் அக்டோபர் 17 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 7.31 மணிக்கு பாகங், ரவூப், CHEROH ( சீரோ ) வட்டார இந்திய கலைக் கலாச்சார இயக்கத்தின் ஏற்பாட்டில் திவான் ஜூப்லி பேராக் மண்டபத்தில் மாபெரும் தீபாவளி கலை இரவு 2024 வெகுவிமரிசையாக நடைபெறவிருக்கிறது.

இந்த மாபெரும் கலைநிகழ்ச்சிக்கு பகாங் மாநில பிகேஆர் தலைவர் ரிசால் பின் ஜாமின், ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் Chow Yu Hui, / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி, / மற்றும் பகாங் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி திருமதி அனிதா குமாரி அப்துல்லா ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொள்ளவிருக்கின்றனர் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுத் தலைவரும், ரவூப் பிகேஆர் தொகுதி துணைத் தலைவருமான மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த கலைவிழாவில் நாட்டின் முன்னணி கலைஞரான “மண்ணின் மைந்தர்” லோக்காப், / அவர்தம் குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருக்கிறார் என்று ரவூப் மாவட்ட மன்ற உறுப்பினருமான மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்..

கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தீபாவளி கலை விழாவில் வருகையாளர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்படும் என்று கலைவிழாவின் இணை ஏற்பாட்டுக்குழுத் தலைவரும், ரவூப், பிகேஆர் தமன் அமலினா லெஸ்டாரி கிளைத் தலைவருமான N. தர்மராஜா செட்டியார் என்ற CD Raja தெரிவித்துள்ளார்.

இந்த தீபாவளி கலை விழாவில் ஆடல், பாடல் மட்டுமின்றி சிறப்பு அங்கமாக மிக பிரமாண்டமான பரிசுகளுடன் அதிர்ஷ்ட குலுக்கலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பற்றுச்சீட்டு 2.00 வெள்ளி வீதம், ஒரு பற்றுச்சீட்டு புத்தகம் 20.00 வெள்ளி என கடைசி நேர விற்பனையில் உள்ளது. டிக்கெட், மண்டபத்திலும் விற்பனை செய்யப்படும் என்று ஏற்பாட்டுக்குழுவின் மற்றொரு தலைவரான R. மனோரகன் குறிப்பிட்டாார்.

அதிர்ஷ்டக்குலு பற்றுச்சீட்டுகளை கலை விழா மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெட்டிக்குள், இரவு 7.00 மணிக்கு தொடங்கி, இரவு 8.30 மணிக்குள் சேர்ப்பிக்கப்பட்டு விட வேண்டும் என்று ரவூப் , பிகேஆர் தமன் அமலினா லெஸ்டாரி கிளைத் துணைத் தலைவருமான மனோகரன் கேட்டுக்கொண்டார்.

அதிர்ஷ்குலுக்களில் முதல் பரிசு : மோட்டார் வண்டி,
இரண்டாம் பரிசு : 50’ திறன் தொலைக்காட்சி
மூன்றாம் பரிசு : திறன்பேசி

தொடர்ந்து 30 விதமான தரமான பரிசுகள் காத்திருப்பதாக ரவூப், CHEROH ( சீரோ ) வட்டார இந்திய கலைக் கலாச்சார இயக்கத்தின் பொறுப்பாளர்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கலைவிழாவில், மக்கள் திரளாக கலந்து கொண்டு அதிர்ஷ்டக் குலுக்கான பற்றுச்சீட்டையும் வாங்கி ஆதரவு நல்குமாறு ஏற்பாட்டுக்குழு சார்பில் மகேந்திரன், தர்மராஜா மற்றும் மனோகரன் கேட்டுக்கொள்கின்றனர். தொடர்புக்கு:

Screen

தொடர்புக்கு:
திரு. மகேந்திரன் (013-9552818)
திரு. தர்மராஜா செட்டியார் (010-9609312)
திரு. மனோகரன் (018-7602292)

WATCH OUR LATEST NEWS