கோலாலம்பூர், அக்டோபர் 15-
எதிர்காலத்தில் மலேசியாவிற்கு தலைமையேற்கக்கூடிய அடுத்த தலைவர்களாக அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் வரக்கூடும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது ஆருடம் கூறியுள்ளார்.
இதேபோன்று பிகேஆர் தலைவர் அன்வாரின் புதல்வி நூருல் இசா, பாஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நிக் அப்துல் அஸிஸின் புதல்வர் நிக் அப்துஹ் நிக் அப்துல் அஜீஸ் போன்றவர்கள் நாட்டிற்கு தலைமையேற்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக 99 வயதான துன் மகாதீர், Sinar Harian நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதேவேளையில் தமது புதல்வர் முக்ரிஸ் மகாதீருக்கும் நாட்டிற்கு தலைமையேற்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அவர் விளக்கினார்.
ஒரு நாட்டின் முன்னாள் தலைவர் என்ற முறையில் தாம் சாதிக்க வேண்டியவற்றை சாதித்து விட்டதாக பெருமிதம் தெரிவித்த துன் மகாதீர், இனி தனக்கென்று எதுவும் தேவையில்லை என்றார்.