பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 15-
துணைப்பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் இளைய சகோதரர் அப்துல் ஹக்கீம், இன்று பாஸ் கட்சியில் ஆயுள் உறுப்பினராக இணைந்துள்ளார்.
கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவுட்டில் உள்ள பாஸ் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிடம் துணைப்பிரதமரின் சகோதரர், தனது உறுப்பினர் விண்ணப்பத்தை சமர்ப்பித்தார் என்று பேரா,பரிட் பன்டர் பாஸ் கட்சி தனது முகநூலில் தெரிவித்தது.
துணைபிரதமரின் சகோதரர், பாஸ் கட்சியில் இணைந்து இருப்பது கட்சிக்கு வலு சேர்ப்பதாக உள்ளது என்று அப்துல் ஹாடி அவாங் வர்ணித்துள்ளார்.