கோலாலம்பூர், அக்டோபர் 16-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மகள் நூரியானா நஜ்வா, / மாட்ரேட் எனப்படும் மலேசிய வெளிவர்த்தக மேம்பாட்டுக்கழகத்தின் இயக்குநர் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
36 வயதான நூரியானா நஜ்வா- வின் நியமனத்தை மாட்ரேட் தலைவர் ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன்- நேற்று தமது முகநூலில் அறிவித்துள்ளார்.
மாட்ரேட் இயக்குநர் வாரியத்திடம் நூர்யானாவின் நியமனக்கடிதத்தை தாம் ஒப்படைத்ததுடன் அந்த முன்னாள் பிரதமரின் மகள், தமது நியமனத்தை ஏற்றுக்கொண்டு பதவி உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டார் என்று ரீஸால் தெரிவித்தார்.