செபரங் பேராய் ,அக்டோபர் 16-
2024-2025 ஆம் ஆண்டிற்கான எஸ்.பி.எம் தேர்வில், அத்தேர்வை எழுதக்கூடிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை பெரிய அளவில் சரிவுக்கண்டு விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு மாணவர்களின் வருகையை உறுதி செய்யக்கூடிய அதிரடி நடவடிக்கைக்குழுவை கல்வி அமைச்சு அமைத்துள்ளது.
கடந்த ஆண்டு தேர்வின் போது பெரிய எண்ணிக்கை அளவில் மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதாமல் போன சம்பவத்தைப் போன்று மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கல்வி துணை அமைச்சர் வாங் கா வோ தெரிவித்தார்.
தேர்வை எழுதுவதற்கு ஆர்வப்படாத மாணவர்களிடம் அந்த தேர்வின் முக்கியத்துவத்தை உணர்த்துவது, அவர்களிடம் நேர்மறையான சிந்தனையை விதைப்பது உள்ளிட்டு மாணவர்களின் நலன் சார்ந்த முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு அந்த குழுவினர் செயல்படுவர் என்று துணை அமைச்சர் வாங் கா வோ குறிப்பிட்டார்.