கோலாலம்பூர், அக்டோபர் 16-
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் பேரா,பிடோர் தற்காலிக தடும்பு முகாமிலிருந்து 131 Rohingya அகதிகள் பெரியளவில் தப்பிச்சென்ற சம்பவத்திற்கு அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதே முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று EAIC எனப்படும் அமலாக்க ஏஜென்சிகளை கண்காணிக்கும் நேர்மை ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
அந்த Rohingya கைதிகள் தடுப்பு முகாமில் அடைத்து வைத்திருந்த போது அவர்கள் அனைவரும் பல்வேறு சித்ரவதைக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரையில் அவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளர்.
அவர்கள் அனைவரும் பீடோர் தடுப்பு முகாமிற்கு மாற்றப்படுதற்கு முன்பு லங்காவி உட்பட நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்துள்ளனர்.
அப்போது இத்தகைய சித்ரவதைக்கு அவர்கள் ஆளாகியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.