தீபாவளி திருநாள் கால பொருட்களின் விலைகட்டுப்பாடு பட்டியல் விரைவில் வெளியிடப்படும்

செர்டாங் , அக்டோபர் 16-

இம்மாதம் இறுதியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி விழா கால பொருட்களின் விலைகட்டுப்பாடு பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரப்பிரிவு அமைச்சு அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தையொட்டி அத்தியாவசியப் பொட்களின் விலை, விருப்பம் போல் உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இப்பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்படும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.

பொருட்களை விநியோகிக்கும் அந்தந்த துறையை சேர்ந்தவர்கள் ஏற்புடைய விலைப்பட்டியலை வெளியிட்டப் பின்னர் அமைச்சு இது குறித்து தனது பட்டியலை அறிவிக்கும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS