முன்னாள் பத்திரிகையாளர் லோகநாதனுக்கு Kasih@HAWANA நிதியுதவி

கோலா சிலாங்கூர் , அக்டோபர் 16-

முன்னாள் பத்திரிகையாளர் லோகநாதன் குல்லாயிரத்திற்கு இன்று தகவல் தொடர்பு துறை அமைச்சின் கீழ் Kasih@HAWANA நிதியுதவி கிடைக்கப்பெற்றது.

முன்னாள் தமிழ்நேசன் – மலேசிய நண்பன் பணியாளரான லோகநாதன் தற்போது வேலை இல்லாமல் பெற்றோரை இழந்து தனியாக இருந்து வந்தார்.

இவரின் நிலையைக் கேள்விபட்டு , பெஸ்தாரி ஜெயா, தாமான் சூரியாவில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக வருகை புரிந்த தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நி சிங் நலம் விசாரித்து Kasih@HAWANA நிதியுதவியை வழங்கினார்.

மேலும் தீபாவளியை முன்னிட்டு பரிசு கூடைகளையும் வழங்கி லோகநாதனுக்கு அவர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS