மூவார் , அக்டோபர் 16-
பணம் கடன் பெற்றவர்கள் கடனை செலுத்தத் தவறியதால் அவர்கள் வீட்டையும் காரையும் எரித்ததாக ஒப்புக் கொண்ட இரண்டு வட்டி முதலைகள் மீது செஸ்ஷன் நீதிமன்றம் இன்று ரிங்12,000 அபராதத்துடன் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது தண்டனை விதிக்கப்பட்டது.
32 வயதான ஜாஜா புத்ரா ரோஸ்லான் மற்றும் 37 வயதானநூர் அஸ்மான் ஹசன் அஷாரி, ஆகியோர் தங்களை குற்றவாளிகள் என்று ஒப்புக்கொண்டனர். முதல் குற்றச்சாட்டின்படி, குற்றவாளிகள் சிலருடன் இணைந்து மார்ச் 28 அன்று, அதிகாலை 3.30 மணிக்கு, தங்காக் நகரில் உள்ள ஒரு 43 வயதான பெண்ணின் காரை எரித்துள்ளனர்.
இரண்டாவது குற்றச்சாட்டின்படி, அதே நாளில் அதிகாலை 4.30 மணிக்கு, ஒரு 39 வயதான ஆணுக்குச் சொந்தமான வீட்டை அந்த வட்டி முதலைகள் எரித்துள்ளனர்.
குற்றவாளிகள் இருவரும் குறித்த கடன்களை வசூலிக்க தங்களின் முதலாளிகளால் ஆணையிடப்பட்டு, கடனை வசூலுக்க பல முறை முயற்சி செய்தபின் வெற்றிபெறாததால், அவர்கள் சிலருடன் சேர்ந்து இருவரின் வீடும் காரும் எரித்து குற்றத்தைப் புரிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.