கோலாலம்பூர், அக்டோபர் 16-
இம்மாதம்18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
நாட்டிலுள்ள அனைவரின் கல்வி மேம்பாட்டில் இந்த வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், மனித மூலதனத்தில் முதலீடு செய்வதன் மூலம் நாடு மேலும் வளர்ச்சி காண்பதற்குரிய வாய்ப்பு உள்ளது என்றார்.
மலேசியர்கள் மருத்துவத்திற்காக அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளதால் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்குவதை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அம்மருத்துவமனைகளில் அதிகப்படியாக கட்டணம் விதிக்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.