ஜொகூர் , அக்டோபர் 17-
ஜோகூர் மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில் பல்வேறு SCAM மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்த தொலைபேசி அழைப்பு மையங்களைச் சேர்ந்த 19 கும்பல்களை மாநில போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர் என்று மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
இந்த கும்பல்களின் இந்ததகைய மோசடி நடவடிக்கைகளை ஜோகூர் மாநில வர்த்தக குற்றச்செயல்கள் தடுப்புப்பிரிவு போலீசார் முறியடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முதலீடு மோசடி, வேலை வாங்கித் தருவதாக ஏமாற்று வேலை, நண்பர் என்று கூறி ஏமாற்றுதல் முதலிய செயல்களில் CaLLing Center மூலம் இந்தகைய மோசடி வேலைகளை அந்த கும்பல்கள் நடத்தி வந்துள்ளன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கும்டபல்கள் ஒடுக்கப்பட்டது மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த மொத்தம் 156 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.