GISBH நிறுவனம் தொடர்பான விவகாரம்

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 17-

GISBH நிறுவனம் தொடர்பான விவகாரத்தில் எந்த அரசாங்க அதிகாரியும் அல்லது அரசியல் தலைவரும் ஈடுபடவில்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

GISBH உடன் அரசு அதிகாரிகள் அல்லது அரசியல் தலைவர்களை தொடர்புபடுத்துவதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் போலீஸ் விசாரணையில் இதுவரை கிடைக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் கூறினார்.

கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் GISBH விவகாரம் தொடர்பாக அரச விசாரணைக் கமிஷன் (RCI) தேவையா என்றும், அதிகாரிகளின் நடவடிக்கையின்றி அந்நிறுவனம் உலகளவில் எவ்வாறு இயங்க முடிந்தது என்றும் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக சைஃபுடின் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS