சென்னை விமான நிலையத்தில் மலேசியப் பெண் உட்பட இருவர் கைது

சென்னை,அக்டோபர் 17-

கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்தடைந்த விமானத்தில் அபூர்வ பச்சோந்திகள், கருங்குரங்குகளை கடத்தி வந்த மலேசியப் பெண் பயணி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டேபார் 13 ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று, சென்னை அண்ணா அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது மலேசியாவில் இருந்து சுற்றுலா பயணியாக சென்னை வந்தடைந்தப் பெண் ஒருவர், இரண்டு பெரிய அளவிலான பிளாஸ்டிக் கூடைகள் வைத்திருந்தார்.

அதில் என்ன இருக்கிறது என்று சுங்க அதிகாரிகள் கேட்டபோது, சரியான பதில் கூறவில்லை. சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த பெண் பயணியை நிறுத்தி, கூடைகளை திறந்து பார்த்துபோது, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அபூர்வ வகை உயிரினங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

கூடைகளில் ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகள் 52 உயிருடன் இருந்தன. அதோடு Siamang மற்றும் gibban என்ற ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்குகள் 4 இருந்ததை கண்டுபிடித்தனர்.

பிறகு அந்த மலேசிய பெண் பயணியை கைது செய்த சுங்கத்துறையினர் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்குகள் பாதுகாப்பு குற்றப்பிரிவு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கிருந்து அதிகாரிகள் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்து, மலேசிய பெண் பயணியிடம் விசாரணை நடத்தினர்.

மலேசியப் பெண்ணிடமிருந்து அந்த அரிய வகை உயிரினங்களை வாங்கிச் செல்வதற்காக, சென்னை விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் காத்திருந்த ஒரு நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மலேசியப் பெண் கைது செய்யப்பட்டதை சென்னை சுங்கத்துறை ஆணையர் மனைதாரா மேத்யூஸ் ஜாலி உறுதி செய்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS