லஞ்ச ஊழல் Selangor Menteri Besar Incorporated நிறுவனத்தின் 20 திட்டங்கள் தொடர்பில் SPRM முழு வீச்சில் விசாரணை

கோலாலம்பூர், அக்டோபர் 17-

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சொத்துக்களையும், முதலீடுகளையும் நிர்வகிக்கும் பிரதான நிறுவனமான MBI எனப்படும் Selangor Menteri Besar Incorporated நிறுவனத்தின் கீழ் 20 திட்டங்களில் லஞ்ச ஊழல் நடந்து இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அந்த நிறுவனத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM முழு வீச்சில் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது.

இந்த திட்டங்கள் யாவும், தற்போதைய சிலாங்கூர் மந்திரி பெசாருக்கு தொடர்பு இல்லாத திட்டங்களாகும் என்று SPRM இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் Selangor Menteri Besar Incorporated நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயலாக்க அதிகாரி ஒருவர், விசாரணைக்கு உதவும் வகையில் அவரை SPRM கைது செய்துள்ளது.

அந்த நபரை ஒரு வாரம் காலம் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை SPRM பெற்றுள்ளதாக டான் ஸ்ரீ ஆசம் பாக்கி விளக்கினார்.

பெயர் இன்னும் பெயர் வெளியிடப்படாத சிலாங்கூர் மாநிலத்தின் செல்வாக்கமிக்க முக்கிய அரசியல்வாதிக்கு சொந்தமான ஒரு வளாகத்திலிருந்து சுமார் 6 லட்சம் வெள்ளி SPRM கைப்பற்றியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS