பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 17-
மலேசிய இருதய சிகிச்சைக்கழகமான IJN, தனது நிபுணத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றவர்களின் மருத்துவக் கட்டணத்தை 10 விழுக்காட்டிலிருந்த 40 விழுக்காடு வரை உயர்த்துவதற்கு கொண்டுள்ள திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் முடிவை IJN வரவேற்றுள்ளது.
IJN- னில் நோயாளிக்களுங்கான மருத்துவக் கட்டணம் உயர்த்தப்பட்டால் அது சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
IJN கட்டண உயர்வை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கோரிக்கை வலுவடைந்து வரும் வேளையில் அது குறித்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துதற்கு சுகாதார அமைச்சு முன்வந்து இருப்பது வரவேற்கத் தக்க நடவடிக்கையாகும் என்று அந்த நிபுணத்துவ மருத்துவமனை அறிவித்துள்ளது.