சென்னை , அக்டோபர் 17-
இந்தியாவின் பல விமான நிறுவனங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதையொட்டி 17 வயது இளையர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
போலி அடையாளத்தைப் பயன்படுத்தி அந்த இளைஞர் சமூக ஊடகத் தளங்களில் மூன்று வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்ததாகத் தெரிகிறது.
ஏர்-இந்தியா மற்றும் இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்களுக்கு அவர் வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பியதாகக் காவல்துறை கூறியது.
இளைஞர் ஒருவரோடு வர்த்தகத் தகராறு இருந்ததாகவும் அவரைச் சிக்கலில் மாட்டிவிட அவரது பெயரைப் பயன்படுத்தி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பியதாகவும் நம்பப்படுகிறது.
கடந்த 3 தினங்களாக இந்தியாவில் இருந்து வௌிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு எக்ஸ் பதிவுகள் மூலம் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 19 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதனால், பெரும்பாலான விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு வெடிகுண்டு சோதனைகள் நடந்தது. மேலும், விமானப்படை விமானங்களின் பாதுகாப்புடன் சில விமானங்கள் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டன.
இன்று வியாழக்கிழமை ஜெர்மனி, Frankfird- டிலிருந்து டில்லியை நோக்கி வந்து கொண்டிருந்த இந்திய விமான நிறுவனமான Vistara Airlines- க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஆகக்கடைசியான செய்தி கூறுகிறது.