குவாந்தன்,அக்டோபர் 17-
பகாங் அரச பேராளர் ஒருவர், கும்பல் ஒன்றுடன் கூட்டாக சேர்ந்து தம்மை தாக்கியதாக கூறும் 44 வயது கட்டுமானத் தொழிலாளி ஒருவர், இவ்விவகாரம் தொடர்பில் போலீஸ் துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததது குறித்து இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கூர்மையான ஆயுதம் மற்றும் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு தாம் தாக்கப்பட்டதாக அலைஸ் அவங் என்ற நபர், அண்மையில் குற்றஞ்சாட்டி காணொளி வெளியிட்டது பெரும் கவன ஈர்ப்பாக அமைந்துள்ளது.
காரணம், இதில் சம்பந்தப்பட்டு இருப்பவர் அரச பேராளர் என்று கூறப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹசனல் இப்ராஹின் ஆலம் ஷா உறுதி அளித்து இருந்தார்.
எனினும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது தமக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று அந்த கட்டுமானத் தொழிலாளர் இன்று தமது ஏமற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.