பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 17-
சுங்கைப்பட்டாணியில் உள்ள ஓர் உணவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த உணவுப் பதார்த்தங்களில் புழுக்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த உணவகத்தை உடனடியாக மூடும்படி கெடா மாநில சுகாதாரத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.
சமூக வளைத்தளங்களில் அந்த உணவகத்தின் தூய்மையற்ற செயல் குறித்து காணொளி பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சுகாதார அதிகாரிகள் அந்த உணவகத்தின் அசுத்தமின்மையை உறுதி செய்ததாக கெடா மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் இஸ்முனி போஹாரி தெரிவித்தார்.