பி40 தரப்பைச் சேர்ந்த நகர்ப்புற மற்றும் புறநகர் மகளிர், அன்னையர், தனித்து வாழும் தாய்மார்கள் ஆகியோருக்கு ஒற்றுமை அரசாங்கத்தின் மலேசிய மடானி கோட்பாடு, ஒரு பாதுகாப்பு அரணாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மகளிர் நலன்களுக்காக அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களையும் நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் வழங்கப்பட்டிருக்கும் மகளிர் நலத் திட்டங்களை சம்பந்தப்பட்ட இலக்கினர், சரியான முறையில் பயன்படுத்தி பலன் அடைய வேண்டும் என்பது மடானி அரசாங்கத்தின் இலக்காகும்.

மகளிர் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்காக பிரத்தியேக பயிற்சித் திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்களில் ஒரு பெண்கூட விடுபட்டு விடக்கூடாது என்பதில் மடானி அரசாங்கம் மிகக் கவனமாக இருக்கிறது. அவர்கள் எங்கு வாழ்கிறார்கள்? எப்பகுதியில் வசிக்கிறார்கள் அல்லது அவர்களின் சமூகப் பொருளாதார பின்னணியைப் பற்றிக் கவலைப்படாமல், பெண்கள் சமுதாயம் ஒட்டுமொத்தத்தில் பயன்பெற வேண்டும், எதிர்காலத்தில் தொழில் திறன் பெற்றவர்களாக உருவாக வேண்டும் என்பதுதான் மடானி அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகவும் / இலக்காகவும் /இருந்து வருகிறது.
அந்த வகையில் மடானி அரசாங்கத்தின் இந்தியப் பெண்களுக்கான பிரதான திட்டங்களின் ஒன்று Program Keusahawanan Madani எனும் Mini SPA மற்றும் முக ஒப்பனை பயிற்சித்திட்டமாகும். இது, அவர்களை தொழில்முனைவர்களாக உருவாக்குவதற்கு அடித்தளமிட்டு வரும் பயிற்சித் திட்டமாகும்.
கடந்த அக்டேபார் மாதம் முற்பகுதியில் Sஷா ஆலம், செக்சியன் 32, திவான் MBSA கெமுனிங் உத்தாமா-வில் நடத்தப்பட்ட இப்பயிற்சியில் அதிகமான இந்தியப்பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அப்பயிற்சியில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அதனால் ஏற்படக்கூடிய அனுகூலங்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
சந்திரகலா, ஷா ஆலாம்

Mini SPA மற்றும் முக ஒப்பனைத்துறையில் நிபுணத்துவம் கொண்ட Yoges Salon Academy Sdn Bhd. நிறுவனத்தின் மூலம் நடத்தப்பபட்ட இந்த பயிற்சித் திட்டத்தின் வாயிலாக நிறைய அனுபவங்களை பெற முடிந்தது என்பதுடன் எதிர்காலத்தில் ஒரு பெரிய வர்த்தகமாக முக ஒப்பனைத்துறையை உருவாக்கிக் கொள்வதற்கு தாம் திட்டம் கொண்டுள்ளதாக கூறுகிறார் ஷா ஆலம், கம்போங் பாரு ஐகாம்- மைச் சேர்ந்த சந்திரகலா.
“ இந்த பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தது மூலம் நிறைய அனுபவங்கள் எனக்கு கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் தன்னம்பிக்கையுடன் இத்தொழில்துறையில் இறங்குவதற்கு ஓர் உந்தும் சக்தியை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. ஃபேசியல் என்று சொல்லக்கூடிய முக ஒப்பனை குறித்து அதிகமான விஷயங்களை தெரிந்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பும், அனுபவமும் இந்த பயிற்சியின் மூலம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒப்பனைக் கலை போதனையை நடத்திய பயிற்றுநர்கள் இளம் வயதுடையவர்களாக இருப்பினும் மிகுந்த நட்புறவுடன் சொல்லிக் கொடுத்தது, அது குறித்து மிக ஆழமாக புரிந்து கொள்ள முடிந்தது” என்று சந்திரகலா தெரிவித்தார்.
ரிச்சி, ஸ்ரீ கெம்பாங்கான்

இது போன்ற நிபுணத்துவப் பயிற்சிகளில் பங்கேற்றது, ஒரு பெரிய வாய்ப்பாக கருதுகிறோம். ஒப்பனைத்துறை குறித்து கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மிக நட்புறவாக சொல்லிக்கொடுக்கும் போது, நாமும் இந்தத துறையில் ஈட வேண்டும் என்ற ஆர்வத்தை விதைக்கிறது என்கிறார் சிலாங்கூர், செரி கெம்பாங்கன்- னைச் சேர்ந்த ரிச்சி தெரிவித்தார்.
“ இதுபோன்ற பயிற்சியில் பங்கு கொண்டது இதுதான் முதல் முறையாகும். முக ஒப்பனைத்துறையை நிபுணத்துவ முறையில் சொல்லிக்கொடுத்தார்கள். பயிற்றுநர்கள் மிகவும் நட்புறவாக பழகினார்கள். இது எவ்வித அச்சமின்றி சந்தேகங்களை துணிந்து கேட்பதற்கு எங்களுக்கு வழிவகுத்தது. ஒப்பனைத்துறையில் கையாள வேண்டிய நுணுக்கங்களை எளிய வழிமுறையில் கற்றுக்கொடுத்தார்கள், செயல்முறையை நாங்களே செய்யக்கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்து, அதன் பலாபலன்களை நாங்களே காணக்கூடிய வாய்ப்பையும் அவர்கள் ஏற்படுத்தி தந்துள்ளார்கள். எதிர்காலத்தில் முகஒப்பனை மையம் ஒன்றை நாங்களே சொந்தமாக நடத்தக்கூடிய அளவிற்கு பல வகையான நுட்பங்களை அவர்கள் கற்றுக்கொடுத்தது மிகுந்த பலனை தந்தது” என்று ரிச்சி தெரிவித்தார்.
கிளேரியா, ஷா ஆலாம்

ஷா ஆலாமைச் சேர்ந்த குமாரி Clearia விவரிக்கையில் முக ஒப்பனைக்கு பயன்படுத்தக்கூடிய பொருத்தமான அழகு சாதனப்பொருட்கள் யாவை, அவற்றை எவ்வாறு நுட்பமாக கையாள வேண்டும் என்பதைப்பற்றி விளக்கினார்கள். எதிர்காலத்தில் இத்துறையில் ஈடுபடுவதற்கு தங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இப்பயிற்சி அமைந்ததாக Clearia குறிப்பிடுகிறார்.
“இந்த இரண்டு நாள் பயிற்சியில் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பயிற்சியில் பங்கு கொண்டவர்களுக்கு சோர்வை தராத வகையில் மிகுந்த உற்சாகத்துடன் பயிற்றுநர்கள் கற்றுத் தந்த விதம் மிக சுலபமாக பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. முக ஒப்பனையில் செய்ய வேண்டிய முதல் கட்டப்பணி, இரண்டாம் கட்டப்பணி, மற்றும் சருமத்திற்கு எந்தெந்த ஒப்பனைப் பொருட்கள் பயன்படுத்தலாம், பயன்படுத்தக்கூடாது, எல்லாப் பொருட்களையும் பயனப்படுத்த முடியுமா, முடியாதா முதலிய விரங்களை தொழில்நுட்ப தன்மைக்கு ஏற்ப கற்றுக்கொள்ள முடிந்தது. அதேவேளையல் இத்தொழிலை சொந்தமாக நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தையும் எங்களுக்கு தூண்டியது* என்று கிளேரியா தெரிவித்தார்.
யோகேஸ்வரி ராஜேந்திரன்

மடானி அரசாங்கம் வழங்கிய நிதி உதவி மற்றும் ஆதரவின் மூலம் இந்தியப்பெண்கள், தொழில்முனைவர்களாக தங்களை உயர்த்திக்கொண்டு, தாங்கள் சார்ந்த தொழில்துறையில் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி முன்னேறி செல்வதற்கு இந்தப் பயிற்சி வழி வகுத்ததாக கூறுகிறார் Keusahawanan Madani பயிற்சித்திட்டத்தை ஏற்பாடு செய்த Persatuan Kemahiran Wanita Selangor இயக்கத்தின் தலைவர் யோகேஸ்வரி ராஜேந்திரன்.
இந்த இரண்டு நாள் பயிற்சியில் பங்கு கொண்ட ஒவ்வொருவருக்கும் தலா 150 வெள்ளி மதிப்புள்ள உபகரணங்களை தாங்கள் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
தமது தலைமையிலான Persatuan Kemahiran Wanita Selangor இயக்கம், மலேசியா முழுவதும் இது போன்ற பயிற்சியை வழங்குவதற்கு மடானி அரசாங்கம் மிகுந்த ஆதரவாகவும், துணையாகவும் இருந்ததாக Yoges Salon Academy Sdn Bhd. நிறுவனத்தின் தோற்றுநரான யோகேஸ்வரி ராஜேந்திரன் குறிப்பிட்டார்.
இந்த தொழில்முனைவர் பயிற்சித் திட்டத்தின் வாயிலாக இவ்வருடம் நிறைய பேரை தங்கள் நிறுவனம் உருவாக்கியுள்ளதாகவும், வரக்கூடிய காலங்களில் நிபுணத்துவம் சார்ந்த திறன் பெற்றவர்களை கொண்ட, ஒரு புதிய தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்று உறுதிபாடு கொண்டுள்ளதாக யோகேஸ்வரி தெரிவித்தார்.
அதேவேளையில் இந்தப்பயற்சித் திட்டத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய மடானி அரசாங்கத்திற்கும், ஷா ஆலாம் மாநகர் மன்ற உறுப்பினரான நதீந்திரன் ராஜ் பாஸ்கரன்- க்கும், சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட சிலாங்கூர் மாநில கோட்டா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதனுக்கும், இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக யோகேஸ்வரி குறிப்பிட்டார்.