கெனிங்காவ்,அக்டோபர் 17-
அண்டை வீட்டுக்காரரை வெட்டிக்கொன்றப் பின்னர் போலீசாரிடமிருந்து தப்பிக்க, கிட்டத்தட்ட ஒரு மாத காலம் கிராமம் ஒன்றின் புதரில் பதுங்கியிருந்த கொலையாளி ஒருவர், பசிக்கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் அங்கிருந்து வெளியேறிய போது அவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
43 வயதுடைய அந்த நபர், சபா, கெனிங்காவ், கம்போங் கௌரன்- என்ற இடத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் மறைந்திருந்த அந்த நபர், உணவுத் தேடி அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அந்த சந்தேகப்பேர்வழியை மக்கள் வளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் Yampil Anak Garai தெரிவித்தார்.
தமது அண்டை வீட்டுக்காரரும், ஒரு டாக்சியோட்டியுமான 58 வயது நபர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் அந்த நபரை போலீசார் தேடி வந்ததாக அவர் மேலும் கூறினார்.