ஜெலி,அக்டோபர் 17-
புலியால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்ற நம்பப்படும் ஒரு மியன்மார் பிரஜை, / கடித்துக் குதறப்பட்ட நிலையில் அவரின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஜெலி – கெரிக் கிழக்கு மேற்கு சாலையின் பத்து மெலிந்தாங் அருகில் 34 வயதுடைய அந்த மியன்மார் பிரஜையின் உடல் இன்று காலை 9.15 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராவையும் திரெங்கானுவையும் இணைக்கும் அந்த கிழக்கு மேற்கு சாலையின் அருகே உள்ள ரப்பர் தோட்டம் ஒன்றிளன் கொங்சி வீட்டில் சக நாட்டவர்களுடன் தங்கியிருந்த அந்த மியன்மார் பிரஜை நேற்று இரவு 8.30 மணியிலிருந்து காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும் இரவு நேரத்தில் குலை நடுங்க வைக்கும் புலியின் உருமல் சத்தத்தை தாங்கள் கேட்டதாக அந்த கொங்சி வீட்டில் தங்கியிருந்த மியன்மார் பிரஜைகள் தெரிவித்தனர்.