மற்றொரு மருத்துவரின் மரணம் குறித்து விசாரணை

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 17-

பினாங்கில் உள்ள செபராங் ப்ராய் – மருத்துவமனையில் மருத்துவ அதிகாரி ஒருவர் வேலை பளு மற்றும் பகடிவதை தொடர்பில் மரணமுற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை செய்து வருவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் டிசுல்கேஃப்லி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைக்காக முழு விசாரணை நடத்தப்படுவதற்கு ஒரு சுயேட்சை விசாரணைக்குழுவை அமைப்பதற்கான சாத்தியம் குறித்தும் அமைச்சர் மறுக்கவில்லை.
ஆனால், அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை அளவில் விசாரணை செய்வதற்கும், அதன் முடிவுக்காகவும் சுகாதார அமைச்சசு காத்திருப்பதாக இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது டத்தோஸ்ரீ டாக்டர் டிசுல்கேஃப்லி இதனை தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதத்தில் மருத்துவர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படும் இரண்டாவது சம்பவமாக இது கருதப்படுகிறது.

தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் டே டியென் யா என்ற பெண் மருத்துவர், சபா, லஹாட் டத்து அரசாங்க மருத்துவமனையில் பணியாற்றி வந்த வேளையில் தாம் தங்கியிருந்த வீட்டில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மரணத்தை ஆராய விசாரணைக்குழு ஒன்றை சுகாதார அமைச்சு அமைத்துள்ளது.

WATCH OUR LATEST NEWS