துப்பாக்கியை எடுத்துக்காட்டும் காணொளி வைரலாகி வருகிறது

பூச்சோங் ,அக்டோபர் 17-

Food Court உணவகத் தளத்தில் இரு ஆடவர்களுக்கு இடையில் நடைபெற்ற வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவின் போது, ஒருவர் கைத்துப்பாக்கியை காற்சட்டையிலிருந்து எடுக்கும் காட்சியைக்கொண்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டு ஆடவர்களுக்கு இடையில் தள்ளுமுள்ளு ஏற்ளபட்ட போது, பெண் ஒருவர் தலையிட்டு, அவர்களுக்கு இடையிலான மோதலை தடுக்கும் காட்சியும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் சில தினங்களுக்கு முன்பு பூச்சோங்கில் உள்ள Food Court உணவகத் தளத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. உணவகத்தில் புகைப்பிடித்தது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வெள்ளைநிற டீ சட்டை அணிந்திருந்த நபர் துப்பாக்கியை உருவியதாக கூறப்படுகிறது.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் எந்தவொரு தரப்பினரிடமிருந்து போலீஸ் புகார் எதனையும் தாங்கள் பெறவில்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

அதேவேளையில் இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் புகார் அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS