ஜார்ஜ் டவுன், அக்டோபர் 17-
நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சிகரெட் விற்பனை வரியை அரசாங்கம் மறுபடியும் கொண்டு வர வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
விற்பனை வரி கொண்டு வரப்படுவது மூலம் தற்போது சிகரெட்டுகளுக்காக லட்சக்கணக்கான குடும்பத்தினர் செலவிடக்வடிய பணத்தை மீதப்படுத்த முடியும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மொஹிதீன் அப்துல் காதிர் தெரிவித்தார்.
சிகரெட்டுக்கு பிரதான மூலப்பொருளான புகையிலைக்கு ஆகக்கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு அரசாங்கம் விற்பனை வரியை விதித்ததாக மொஹிதீன் சுட்டிக்காட்டினார்.
விற்பனை வரி விதிப்பது மூலம் தற்போது நாட்டில் உள்ள 50 லட்சம் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
