தாமான் மெலாவத்தி குடியிருப்பாளர்கள் வீடு திரும்ப அனுமதி

கோலாலம்பூர், அக்டோபர் 17-

கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதுகாப்பு கருதி, வெளியேற்றப்பட்ட உலு கெளாங், தாமன் மெலாவதி- யைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், இன்று மாலை 6 மணி முதல் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு நிகழ்ந்து, மூன்று நாட்கள் ஆன நிலையில் மலைச்சாரல் ஓரத்தில் உள்ள அந்த குடியிருப்புகளின் பாதுகாப்புத்தன்மை குறித்து சம்பந்தப்பட்ட அரசாங்க ஏஜென்சிகளுடன் விவாதிக்கப்பட்டு, கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

நிலச்சரிவு நிகழ்ந்த பகுதியில் கனிமவள மற்றும் பூ வியியல் துறையினர் நடத்திய ஆய்வில் மண் நகர்ச்சி குறித்து புதிய அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் வெளியேற்றப்பட்ட Jalan E 6 பகுதியைச் சேர்ந்த 11 குடும்பஙகளைச் சேர்ந்த 33 பேர், தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்புதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS