கோலாலம்பூர், அக்டோபர் 18-
நாட்டில் ஆடம்பரத்தன்மையிலான மெகா மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் இனி இடம் அளிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 205 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அரசாங்கத்தின் மெகாதிட்டங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
எனினும் அரசாங்கம் அமல்படுத்தக்கூடிய மேம்பாடுகள் என்பது மக்கள் நலன் சார்ந்த பொது வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதாக மட்டுமே இனி இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
