கோலாலம்பூர், அக்டோபர் 18-
மக்கள் பலதரப்பட்ட அரசாங்க சேவைகளை ஓரிடத்தில் பெறும் பொருட்டு தொடங்கப்பட்டுள்ள நகர்ப்புற உருமாற்று மையமான UTC- யில் மேலும் பல கூடுதல் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக மேலும் பலதரப்பட்ட அரசாங்க ஏஜென்சிகளின் உதவித்திட்டங்களை மக்கள் பெறும் பொருட்டு, UTC சேவை மையத்தின் சேவைகள் விரிவுப்படுத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
