கோலாலம்பூர், அக்டோபர் 18-
நடப்பு காலச்சூழ்நிலைக்கு பொருந்திவரக்கூடியவை அல்ல என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளர்.
காலனித்துவ காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் உட்பட அந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சட்டங்கள் நடப்பு காலச்சூழ்நிலைக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதற்கு அவற்றின் உள்ளடக்கங்கள் மீள் ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் விளக்கினார்.
