குறைந்த பட்ச சம்பள விகிதம் 1,700 ரிங்கிட்டாக உயர்வு

கோலாலம்பூர், அக்டோபர் 18-

அரசாங்கம் தற்போது நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச சமபள விகிதமான 1,500 ரிங்கிட், 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் கீழ் 1,700 வெள்ளியாக உயர்த்தப்படவிருப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

நடப்பு குறைந்த பட்ச சம்பள விகிதத்தில் 200 ரிங்கிட் கூட்டப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 1,700 ரிங்கிட் குறைந்த பட்ச சம்பள விகிதம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

ஐந்துக்கும் குறைவான தொழிலாளர்களை கொண்டுள்ள முதலாளிமார்களுக்கு இந்த குறைந்த பட்ச சம்பளத்தின் புதிய விகிதம், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி அமலுக்கு வருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS