கோலாலம்பூர், அக்டோபர் 18-
உயர்கல்விக்கூடங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் கல்வி உதவித் தொகையானது, வசதிப்படைத்தவர்கள் மற்றும் செல்வந்தர்களின் பிள்ளைகளுக்கு கட்டம் கட்டமாக குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கூடுதல் வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை குறைப்பது மூலம் முழு தங்கும் வசதிக்கொண்ட பள்ளிகள் மற்றும் பொது உயர் கல்விக்கூடங்களின் தரத்தை உயர்த்துவதற்கு அந்த நிதி பயன்படுத்ப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
