ஈப்போ , அக்டோபர் 18-
ஆடம்பர அடுக்குமாடி வீடொன்றின் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்த 6 வயது சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
இச்சம்பவம் நேற்று இரவு 10.50 மணியளவில் கீழ் பேரா மாவட்டத்தில் செரி இஸ்கந்தர் – ரில் நிகழ்ந்தது. கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த சிறுவன் தற்போது சங்கத் மெலிந்தாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான் என்று கீழ் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஹபீசுல் ஹெல்மி ஹம்சா தெரிவித்தார்.