ஷா ஆலம், அக்டோபர் 18-
அம்னோ முன்னாள் பொருளாரும், முன்னாள் நிதி அமைச்சருமான துன் டைம் ஜைனுதீன் – னின் மனைவி நைமா காலித், வருமான வரி வாரியத்திற்கு இன்னும் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்து வரும் 31கோடியே 38 லட்சத்து 82 ஆயிரம் வெள்ளியை செலுத்த வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று அந்த முன்னாள் அமைச்சரின் மனைவி செய்து கொண்ட விண்ணப்பத்தை ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
அந்த உத்தரவை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை என்று கூறி அந்த முன்னாள் நிதி அமைச்சரின் 67 வயதுடைய மனைவியின் விண்ணப்பத்தை நீதிபதி Shahnaz Sulaiman தெரிவித்தார்.