பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 18-
சுமார் 60 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கப்பாலங்கள் களவாடப்பட்ட இரு வெவ்வேறு சம்பவங்களில் எட்டு பேர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி பூச்சோங்கில் உள்ள ஒரு தொழிற்சாலை முன்புறம் பாராங் முனையில் 22 வயது இளைஞரை மடக்கி 16.9 கிலோ எடைகொண்ட தங்கப்பாலங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த எண்மரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.