சேமிப்பை மாற்ற இபிஎப். ஆராய்ந்து வருகிறது

கோலாலம்பூர், அக்டோபர் 18-

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்.பில் கணக்கு வைத்திருக்கும் சந்தாதாரர்கள், தங்களின் ஒட்டுமொத்த சேமிப்பில் ஒரு பகுதியை தங்கள் நெருங்கிய உறவினர்களின் பெயரில் மாற்றுவதற்கு அனுமதிப்பது குறித்து அந்த வாரியம் ஆராய்ந்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நாடு மூத்தக்குடி மக்கள் அந்தஸ்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் அதற்கு தயாராகும் வகையில் இந்த பரிந்துரை ஆராயப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS