கோலாலம்பூர், அக்டோபர் 19-
வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தல் குற்றம் தொடர்பில் இவ்வாண்டு அக்டோபர் மாதம் முதல், 74 மலேசியர்கள் மரணத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.
புருணை, சீனா, இந்தோனேசியா, லாவோஸ், சிங்கப்பூர, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் அந்த 74 மலேசியர்களும் மரணத் தண்டளையை எதிர்நோக்கியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசன் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மலேசியர்களின் நலனில் அரசாங்கம் அக்கறை கொள்கிறது என்று குறிப்பிட்ட முகமட் ஹசான், அவர்கள் எதிர்நோக்கி வரும் வழக்குகளையும், அவர்கள் தொடர்புடைய விவகாரங்களையும் அந்தந்த நாடுகளில் உள்ள மலேசியத் தூதரகத்தின் வாயிலாக அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றார்.