நீதி நிலைநாட்டப்படும் , பகாங் பட்டத்து இளவரசர் உறுதி

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 19-

ஒரு கட்டுமானத் தொழிலாளியான அலைஸ் அவங் என்பவர், கும்பல் ஒன்றினால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்தில் பகாங் அரசப் பேராளர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தாம் ஏற்கனவே வாக்குறுதி அளித்து இருப்பதைப் போல இந்த தாக்குதல் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்று பகாங் பட்டத்து இளவரசரான Tஎங்கு மஹலோட பாகங், தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா மீண்டும் உறுதிகூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு கட்டுமானத்தொழிலாளியான அலியாஸ் என்பவருக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்பதற்கு தாம் உறுதி கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.

பகாங் அரச பேராளர் ஒருவர் சம்பந்தப்பட்ட கும்பல் ஒன்றின் தாக்குலுக்கு ஆளான தாம், இது குறித்து போலீசில் புகார் செய்தும் இதுவரையில் எந்தவொரு நடவக்கையும் எடுக்கப்படவில்லை என்று கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி அந்த கட்டுமானத் தொழிலாளர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது தொடர்பில் பகாங் பட்டத்து இளவரசர் கருத்துரைத்தார்.

தாக்குலுக்கு ஆளான அலியாஸ் என் குடிமகன். அவருக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS