சம்பளத்தை தொட மாட்டேன் பிரதமர் அன்வார் தொடர்ந்து உறுதி

கோலாலம்பூர், அக்டோபர்

நாட்டின் பிரதமர் என்ற முறையில் அரசாங்கம் வழங்கக்கூடிய சம்பளத்தை தொடப்போவதில்லை என்ற தமது நிலைப்பாடு தொடரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

தமது தலைமையிலான அரசாங்கம், நாட்டின் பொருளாதார வளர்ச்ச்சியை வலுப்படுத்தும் வரையில் சம்பளத்தைப் பெறப்போவதில்லை என்ற தம்முடைய உறுதிப்பாடு தொடரும் என்றும், அதில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என்றும் 2025 ஆம் ஆண்டுக்கான 42 ஆயிரத்து 100 கோடி வெள்ளி பெறுமானமுள்ள பட்ஜெட்டை அறிவித்த போது, தமது நிலைப்பாட்டை பிரதமர் அறிவித்தார்.

அதேவேளையில் தமது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அரசியல் நியமனஙகளில் இருப்பவர்களுக்கான சம்பளம், 20 விழுக்காடு பிடித்தம் செய்யப்படும் என்ற நிலைப்பாடும், தொடரும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் பத்தாவது பிரதமராக தாம் பொறுப்பேற்ற போது, தமது லைமையில் அமைந்த அமைச்சரவையின் உறுப்பினர்களும், தாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டைப் போல அவர்களும் தங்கள் சம்பளத்தில் 20 விழுக்காடு பிடித்தம் செய்யப்படுவதற்கு உறுதி பூண்டு இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க ஊழியர்களுக்கான பொதுச்சேவைத் சம்பள முறை திட்டத்தின் கீழ் உயர் நிலை அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு வகை செய்யும் 7 விழுக்காடு சம்பள உயர்வையும் அவர்கள் நிராகரித்து இருப்பதை பிரதமர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS