பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், இந்தோனேசியா பயணம்

புத்ராஜெயா,அக்டோபர் 19

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள், இந்தோனேசியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்தோனேசிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று பிரதமர் இப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்தோனேசியாவின் எட்டாவது அதிபராக பதவியேற்கவிருக்கும் பிரபோவோ சுபியாண்டோ மற்றும் துணை அதிபராக பதவியேற்கவிருக்கும் ஜிப்ரான் ரகபுமிங் ரகா ஆகியோரின் பதவியேற்பு சடங்கிலும் பிரதமர் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS