மலேசியா இதுவரை கண்டிராத DMY நிறுவனர் புதல்வரின் பிரமாண்டபமான திருமண விழா மின்னும் நட்சத்திர உலகமாக மாறியது Setia City Convention Centre

செட்டியா ஆலம் , அக்டோபர் 19-

கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி DMY Creation நிறுவனத்தின் தோற்றுநரான DMY என அறியப்படும் டத்தோ முஹம்மது யூசோஃப் – பின் புதல்வரான மணமகன் ஃபஜ்ருல் ரஹ்மான் மற்றும் மணமகள் சிதி ஹனிசா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வு ஷா ஆலாம், Setia City Convention Centre- ரில் மிக பிரமாண்டபமான நடைபெற்றது.

இரண்டு பிரமாண்டபமான அரங்குகள் திரைப்பட காட்சியமைப்பை ஒத்திருக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் டத்தோ முஹம்மது யூசோஃப்- புதல்வரின் திருமண வைபவம் / மணவிழாவில் கலந்து கொண்டவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

DMY- யின் துணை நிறுவனமான DMY Events / Sudha Sound Light நிறுவனத்துடன் இணைந்து பிரமிக்க வைக்கும் ஒளியமைப்பு மற்றும் அதிநவீன ஒலி வடிவமைப்பு, அரங்க சூழல் திகைப்பில் ஆழ்த்தும் வகையில் அதன் அசத்தலான அலங்கரிப்பு அமைந்திருந்து.

மலேசிய கலைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், முன்னணி நட்சத்திரங்கள், ஊடகவியலாளர்கன் என பலர் இத்திருமண நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

மணமகனும், மணமகளும் புகழ்பெற்ற இந்திய வடிவமைப்பாளர்களான மணீஷ் மல்ஹோத்ரா மற்றும் சப்யசாசி வடிவமைத்த உயர் பாணியிலான, அதிநவீன ஆடை, அணிகலன்களை அணிந்த நிலையில் பிரதான மேடையில் காட்சி அளித்தது விழாவிற்கு முத்தாய்ப்பு வைத்தது.

பிரபல சமையல்காரர் மாதம்பட்டி ரங்கராஜி தலைமையில் விருந்தினர்களுக்கு பல வகையான உணவுகளின் விருந்தோம்பல் வழங்கப்பட்டது. புகழ்பெற்ற கலீஃபா கேட்டரிங்கின் பாரம்பரிய மற்றும் நவீனத்துவத்தின் கலவையாக பரிமாறப்பட்ட முதன்மை உணவுப் பதார்த்தங்கள் அந்த மாலைப்பொழுதுக்கு இனிமை கூட்டியது.

Prime Dairy-யினால் வழங்கப்பட்ட இனிப்பு பதார்த்தங்கள், கேக் வகைகள் ஓர் ஆடம்பரமான உணவை உண்ட மனநிறைவை சுமார் 4 ஆயிரம் விருந்தினர்களுக்கு ஏற்படுத்தியது.

புகழ்பெற்ற பெற்ற வயலின் கலைஞர் மனோஜ் குமாரின் மனதை லயிக்க வைத்த இன்னிசை, உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவத்தை தந்ததது. புகழ்பெற்ற நடன அமைப்பாளர் ஜான் பிரிட்டோ, / பாலிவூட் மற்றும் கோலிவுட் கலாச்சாரங்களின் இணைவை பிரதிபலிக்கும் நடனங்களை உருவாக்கி, சினிமா பாணியிலான காட்சியமைப்பை தந்தார்.

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் உட்பட தமிழ்த்திரையுலககைச் சேர்ந்த நட்சத்திரங்கள் கலந்து கொண்டது, பிரமாண்டபமான நட்சத்திர திருமண விழாவாக மாறியது.

உணவை ருசித்து ரிவ்யூ தரும் இர்ஃபான் வியூ சேனலின் பிரபலமான You Tuber, முகமது இர்பான், அவருடன் இணைந்த ஆர்ஜே பிராவோ மற்றும் சிந்துஜா ஹரி ஆகியோர் விருந்தின் சுவையை எடுத்துரைத்து நிகழ்விற்கு இனிமை சேர்த்தனர். அவர்கள் எடுத்துக்கொண்ட படங்கள், #DMYVEETUKALYANAM என்ற ஹேஷ்டேக்கின் கீழ் சமூக ஊடக தளங்களில் உடனடியாக பகிரப்பட்டன.

திருமண விழாவின் முக்கியத்துவம் குறித்து வருகை தந்திருந்த விருந்தினர்கள் முன்னிலையில் உணர்ச்சிப்பொங்க பேசினார் மணமகன் தந்தையும், DMY Creation நிறுவனத்தின் தோற்றுநருமான டத்தோ முஹம்மது யூசுஃப்.

இந்த குறிப்பிடத்தக்க வைபவமானது. வெறும் திருமணத்துடன் நின்றுவிடவில்லை. அதற்கும் மேலானதாகும். இரண்டு கலாச்சாரங்கள், இரண்டு குடும்பங்கள் மற்றும் இரண்டு உலகங்களின் ஒன்றிணைவாகும், இரு மனங்களின் சங்கமமாகும் என்று வர்ணித்தார்.

இந்த மணவிழாவில் எங்களுடன் இணைந்திருந்திருந்த அனைவருக்கும் இந்த சிறப்பான தருணத்தை பகிர்ந்துக்கொள்வதில் தாம் உண்மையிலேயே பெருமிதம் கொள்வதாக டத்தோ முஹம்மது யூசுஃப். நன்றிபெருக்குடன் தமது நன்றியுரையில் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS