கோலாலம்பூர், அக்டோபர் 19-
சிலாங்கூர் மாநிலத்தில் சனிக்கிழமை இரவு, 117 பேராக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 136 ஆக உயர்ந்துள்ளது.
சிலாங்கூர் உட்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ள 27 நிவாரண மையங்களில் 3,781 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
பேராக்கில், கெரியன், / ஹிலிர் பேராக், / கம்பர்,/ பேராக் தெங்கா,/ குவாலா கங்சார் ஆகிய பகுதிகளில் இடங்களில் 1,619 பேர் 12 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 1,459 பேராக இருந்தது என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிர்வாகம் தெரிவித்துள்ளது.