பேராய் ,அக்டோபர் 21-
இன்று அதிகாலை 4.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை 134.9 ஆவது கிலோமீட்டரில் பினாங்கு, பிறை அருகில் நிகழ்ந்த விபத்தொன்றில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.
காரினால் மோதப்பட்டு, அந்த வாகனத்தின் அடியில் சிக்கிய அந்த மோட்டார் சைக்கிளோட்டி, சம்பவ இடத்திலேயே மாண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
24 வயது ஆங் கியென் சியோங் என்ற நபரே இச்சம்பவத்தல் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர். Perodua Viva Elite ரக காரின் அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்சிய அந்த நபரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி நாடப்பட்டது.