கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய ஆடவர் கைது

பத்து பஹாட் , அக்டோபர் 21-

ஜோகூர்,பத்து பஹாட்பேருந்து நிலையத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்களின் கண்ணாடிகளை உடைத்து, சேதப்படுத்தி, நாச வேலையை புரிந்த அந்நிய நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களின் கண்ணாடிகளை நபர் ஒருவர் கண்மூடித்தனமாக உடைத்து, சேதப்படுத்தும் காட்சியைக் கொண்ட காணொளி ஒற்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த நபர் வளைத்துப்பிடிக்கப்பட்டதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாஹ்ருலானுார் முஷாதத் அப்துல்லா சானி தெரிவித்தார்.

நேற்று மாலை 3.30 மணிளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் ரோந்துப் போலீசாரிடமிருந்து தகவலைப் பெற்ற போலீசார், துரித வேகத்தில் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த நபர், அவ்விடத்திலேயே பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS