கோலாலம்பூர், அக்டோபர் 21-
கடந்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூர் டாலருக்கு எதி ரகாக மலேசிய ரிங்கிட் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது என்று துணை கல்வி அமைச்சர் வாங் கா வோ தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்த்திருத்தங்களின் எதிரொலியாக நாட்டின் பொருளியல் வளர்ச்சி, மேன்மை காண்கிறது என்பதற்கு ரிங்கிட் மதிப்பின் ஏறுமுகம் சிறந்த உதாரணமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிரதமர் அறிவித்த 42 ஆயிரத்து 100 கோடி வெள்ளி மதிப்பிலான 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களின் சிறந்த அனுகூலங்களை முன்வைத்து, வரையப்பட்டுள்ள அதேவேளையில் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் வாங் கா வோ தெரிவித்தார்.