கோலாலம்பூர், அக்டோபர் 21-
பொது இடத்தில் தன் வசம் கத்தியை வைத்திருந்த குற்றத்திற்காக மாது ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
ஜெய்ம் ஜமிலா அப்துல்லா என்ற 47 வயதுடைய வீடு எதுவும் இல்லாத அந்த மாது, கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி பிற்பகல் 2.50 மணியளவில் கோலாலம்பூர், டாங் வாங்கி, ஆஃப் ஜாலான் கஸ்தூரி, லெபுஹ் புடு -வில் உள்ள ஒரு ஹோட்டலின் முன்புறம் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித்தண்டனை விதிக்க வகை செய்யும் 1958 ஆம் ஆண்டு அபாயகர ஆயுத சட்டத்தின் கீழ் அந்த மாது குற்றஞ்சாட்டப்பட்டார்.
பட்டபகலில், பொது மக்கள் நடமாட்டமிகுந்த ஒரு பரபரப்பான பகுதியில் அந்த மாது ஏன் கத்தியை வைத்திருந்தார் என்பதற்கு நியாயமான காரணங்களை சொல்ல தவறிவிட்டதாக நீதிபதி இஸ்ரலிஸாம் சனுசி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.