கோலாலம்பூர், அக்டோபர் 21-
தங்கள் வசம் 400 அமெரிக்க டாலர் மதிப்புள்ள கள்ள நோட்டை வைத்திருந்ததாக தனியார் கல்லூரியைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டு மாணவர்கள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் – னைச் சேர்ந்த அந்த மூன்று மாணவர்களும் நீதிபதி Azura Alwi முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
25 வயது இப்ராஹிம் ஜல்லோ,30 வயது ஜான் மொரோவியா மற்றும் 20 வயது சோரி பிரிமா கால்கர்என்ற அந்த மூன்று வெளிநாட்டு மாணவர்கள் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு Kondominium வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.